ஓடும் ரயிலில் இருந்து குதித்த மூதாட்டி: நிகழ்ந்த விபரீதம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் ஓடும் ரயிலில் இருந்து மூதாட்டி ஒருவர் குதித்தபோது அவரது கால் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள St. Moritz ரயில் நிலையத்தில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று காலை நேரத்தில் 83 வயதான மூதாட்டி ஒருவர் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

குறிப்பிட்ட ரயில் நிலையம் வந்தபோது, ரயில் நிற்பதற்கு முன்னதாக கதவை திறந்துக்கொண்டு மூதாட்டி நடைமேடையில் குதித்துள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக ரயிலுக்கும் நடைமேடைக்கும் மத்தியில் உள்ள இடைவெளிக்குள் தவறி விழுந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மூதாட்டியின் இடது கால் சக்கரத்தில் சிக்கி நசுங்கியுள்ளது.

ரயில் சற்று தூரம் சென்று நின்ற பிறகு மூதாட்டி விழுந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டார்.

விபத்து குறித்து ஹெலிகொப்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால், மூதாட்டிக்கு படுகாயம் ஏற்பட்டு கால் துண்டானதாக கூறப்படுகிறது.

ரயில் நிற்பதற்கு முன்னதாக மூதாட்டி எதற்காக கீழே குதித்தார் என்பது பற்றி தகவல் தெரியவரவில்லை.

ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இவ்விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments