சுவிஸ் ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் அட்டகாசம்: பொலிஸ் வலைவீச்சு

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

சுவிஸ் ரயில் நிலையத்தில் டிக்கெட் சரிபார்ப்பவர்களை மர்ம நபர்கள் சரமாரியாக பாட்டில்களால் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் Limmatplatz ரயில் நிலையத்திலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில், படுகாயமடைந்த நான்கு பரிசோதகர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

advertisement

சம்பவத்தின் போது அதிகாலை Limmatplatz ரயில் நிலையத்தில் VBZ அதிகாரிகள் டிக்கெட் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது, டிக்கெட் பரிசோதகரிடம் வந்த மர்ம நபர் அவரை மிரட்டியுள்ளான். உடனே சக பரிசோதகர்கள் உதவிக்காக செல்ல, உடனே அவர்களை சூழ்ந்த மர்ம நபர்கள் ஒன்றுக்கூடி பரிசோதகர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர், பாட்டில்களை கொண்டும் தாக்கி விட்டு மர்ம நபர்கள் சம்பவயிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த நான்கு பரிசோதகர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக தற்போது வரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், சாட்சிகளை எதிர்பார்த்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments