மாடியிலிருந்து விழுந்து 2 வயது குழந்தை: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் மாடியிலிருந்து 2 வயது குழந்தை விழுந்ததை தொடர்ந்து தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் உள்ள சூரிச் நகரில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று பிற்பகல் 12 மணியளவில் அடுக்குமாடி வீட்டின் ஜன்னல் வழியாக 2 வயது குழந்தை கீழே விழுந்துள்ளது.

சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை சிலர் அருகில் இருந்த மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்துள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்றுள்ளனர்.

குழந்தை தவறி விழுந்ததா? அல்லது பின்னணி காரணம் ஏதாவது உள்ளதா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு சென்ற தடவியல் துறை வல்லுனர்கள் ஜன்னலில் பதிவாகியுள்ள தடயங்களை பதிவு செய்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments