பேஸ்புக் மூலம் 26 சிறுமிகளிடம் காமலீலை புரிந்த நபர்: 10 ஆண்டுகள் சிறை?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் பேஸ்புக் மற்றும் வாட்சப் மூலம் 26 சிறுமிகளிடம் காமலீலையில் ஈடுப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு சுவிஸில் உள்ள ரோமண்டியில் பெயர் வெளிடப்படாத கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

பேஸ்புக் மற்றும் வாட்சப்பில் போலி கணக்குகளை தொடங்கிய அவர் சிறுமிகளை குறிவைத்து தனது தொடர்பை விரிவுப்படுத்தி வந்துள்ளார்.

ஓன்லைன் மூலமாக சிறுமிகளிடம் நட்பாக பழகி பின்னர் தனது வலையில் விழ வைத்துள்ளார். சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்து அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.

விளைவுகளை அறியாத சில சிறுமிகளும் விளையாட்டாக நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

புகைப்படங்களை பெற்றதும் அந்த நபர் சிறுமிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

லைவ் வீடியோவில் காமலீலைகளில் ஈடுப்படுமாறு சிறுமிகளை மிரட்டி பணியவைத்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், சிலரை தனது வீட்டிற்கு அழைத்து அவர்கள் மீது பாலியல் தாக்குதலும் நடத்தியுள்ளார்.

இதுபோன்ற செயல்களில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் சிறுமி ஒருவரின் துணிச்சலின் விளைவாக நபரின் லீலைகள் பெற்றோரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

நபரின் செயல்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஜெனிவா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நபர் மீதான குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்