அசுர வேகத்தில் செங்குத்தாக ஏரியில் பாய்ந்த விமானம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com
advertisement

சுவிட்சர்லாந்திலிருந்து ஜேர்மனிக்கு பயணித்த சிறிய ரக விமானம் கான்ஸ்டன்ஸ் ஏரியில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரிச் நகரிலிருந்து, ஹாம்பர்க் நோக்கி பயணித்த சிறிய ரக விமானமே கான்ஸ்டன்ஸ் ஏரியில் விழுந்து மூழ்கியுள்ளது.

advertisement

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகொப்டர் மற்றும் படகு உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், விமானத்தில் சென்ற இருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம், விமானத்தின் பாகங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானத்தின் முக்கிய பாகம் ஒன்று செயலிழந்ததே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. எனினும், தற்போது வரை விபத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

விபத்தை நேரில் பார்த்தவர்கள், அசுர வேகத்தில் வந்த விமானம் செங்குத்தாக ஏரியில் விழுந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்