சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

Report Print Shalini in சுவிற்சர்லாந்து
473Shares
473Shares
lankasrimarket.com

சுவிஸ் நாட்டில் St-Gallen மாநிலத்தில் வசித்த 22 வயதுடைய சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது St-Gallen மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிகிழமை (04.08.2017) அன்று, St-Gallen மாநிலத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள நகர் பகுதியில் (St gallen City, Market platz ) ஒரு உணவகத்தின் மத்தியில் அமைந்துள்ள தோட்டப் பகுதியிலேயே இந்த கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.

கழுத்தில் ஆழமாக கத்தியால் குத்தப்பட்டுள்ளதால், குறித்த இளைஞன் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சிகிச்சை பலனளிக்காததால் குறித்த தமிழ் இளைஞன் நேற்று 08.08.2017 செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளார்.

கத்தியால் குத்தியவர் 42வயதுடைய சுவிஸ் பிரஜை எனவும், அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாகவும் செங்களான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது இதுவரை தெரியவில்லை.

(வீடியோ இணைப்பு) - மேலும் தகவல்களுக்கு


மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்