ஏலியன் என நினைத்து நண்பரை கொலை செய்த நபருக்கு சிறை தண்டனை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
144Shares
144Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் நண்பரை ஏலியன் என நினைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சூரிச்சிற்கு அருகில் உள்ள Meilen என்ற நகரில் பென்னட்(32) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.

பெரும் பணக்காரரான பென்னட் பிரித்தானிய நாட்டை சேர்ந்த 23 வயதான நபருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

பென்னட்டிற்கு சுவிஸ் மட்டுமின்றி பிரித்தானியா மற்றும் ஜேர்மன் குடியுரிமையும் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் திகதி பென்னட்டை சந்திக்க வாலிபர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, பென்னட் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது. நண்பரை கண்ட பென்னட் அவருடன் வாக்குவாதில் ஈடுப்பட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து நண்பரை பென்னட் பலமாக தாக்கியுள்ளார்.

தாக்குதலில் நிலைகுலைந்த வாலிபர் கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் பென்னட்டை கைது செய்தனர்.

பென்னட்டிடம் விசாரணை செய்தபோது இக்கொலை நிகழ்ந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருடைய முன்னாள் தோழியை கற்பழித்த சம்பவமும் பொலிசாருக்கு தெரியவந்தது.

மேலும், தனது நண்பர் ஏலியனாக தெரிந்தார் என்றும் தன்னை கொலை செய்ய முயன்றதால் அவரை அடித்து கொன்றதாக பென்னட் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவ்வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, பென்னட்டிற்கு 12 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்