மனைவியின் பிரசவத்திற்கு பின் கணவனுக்கு ஊதியத்துடன் விடுமுறை: வருகிறது புதிய சட்டம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
307Shares
307Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் மனைவியின் பிரசவத்திற்கு பின் அவரது கணவனுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் புதிய சட்டத்திற்கு அந்நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பிரசவம் செய்யும்போது அவர்களுக்கு 80 சதவிகித ஊதியத்துடன் 14 வாரங்கள் விடுமுறை சட்டபூர்வமாக அளிக்கப்படுகிறது.

ஆனால், தந்தைகளுக்கு எவ்வித விடுமுறையும் சட்டப்பூர்வமாக அளிக்கப்படுவதில்லை. ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டும் ஒரு நாள் மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கின்றன.

இந்நிலையில், தந்தைகளுக்கும் ஊதியத்துடன் 4 வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்தாண்டு யூலை மாதம் எழுந்தது.

இக்கோரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கையெழுத்து ஆதரவு சேகரிக்கப்பட்டது.

சுவிஸ் சட்டப்படி, பொதுமக்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்து 50,000 பேர் கையெழுத்திட்டால் அக்கோரிக்கை தொடர்பாக அரசாங்கம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒரு கோரிக்கை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கு பெரும்பான்மை கிடைத்தால் அதனை அரசாங்கம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்நிலையில், சுவிஸ் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பொதுமக்கள் சேகரித்த ஆதரவு கையெழுத்துகளின் எண்ணிக்கை 107,075 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தந்தைகளுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கும் கோரிக்கையை அரசு விரைவில் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது.

மேலும், இக்கோரிக்கை தொடர்பாக நடத்தப்பட உள்ள பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மை கிடைத்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் இச்சட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016-ம் ஆண்டின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் தந்தைகளுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் நாடுகளின் பட்டியல் இதோ!

 • போர்ச்சுகல் - 5(வாரங்கள் விடுமுறை) - 100 (சதவிகித ஊதியம்)
 • லிதுனியா - 4 - 100
 • பின்லாந்து - 3 - 100
 • ஸ்லோனியா - 2.9 - 65.3
 • பல்கேரியா - 2.1 - 78.4
 • ஸ்பெயின் - 2.1 - 100
 • அவுஸ்ரேலியா - 2 - 42.3
 • பெல்ஜியம் - 2 - 73.4
 • பிரித்தானியா - 2 - 20.2
 • டென்மார்க் - 2 - 53.6
 • எஸ்டோனியா - 2 - 100
 • பிரான்ஸ் - 2 - 92.8
 • போலந்து - 2 - 100
 • சுவீடன் - 1.4 - 61.2
 • இத்தாலி - 0.4 - 100
 • ஜேர்மனி - 0 - 0
 • ஜப்பான் - 0 - 0
 • சுவிட்சர்லாந்து - 0 - 0
 • அமெரிக்கா - 0 - 0

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்