தந்தை கண்முன் கார் மோதி பலியான 4 வயது மகன்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் 4 வயது சிறுவன் ஒருவன் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் St. Gallen மாகாணத்தில் உள்ள Jonah என்ற நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று காலை நேரத்தில் தந்தை ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அருகில் உள்ள பார்கிங்கில் இருந்து 44 வயதான பெண் ஒருவர் தனது காரை இயக்கிக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், தந்தையின் கைப்பிடித்துக்கொண்டு நடந்துச்சென்ற 4 வயது சிறுவன் திடீரென கையை விட்டுவிட்டு சாலையை கடக்க முயன்றுள்ளான்.

சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சிறுவன் மீது பெண்ணின் கார் ஏறியுள்ளது.

தன்னுடைய கண்முன்னால் மகன் கார் விபத்தில் படுகாயம் அடைத்து துடிப்பதை கண்டு தந்தை அதிர்ச்சியில் அலறியுள்ளார்.

சிறுவனுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் சில நிமிடங்களில் சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது.

சாலை விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது தொடர்பாக அந்நகர பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்