சுவிற்சர்லாந்தில் குருந்தமரத்தடியில் ஞானலிங்கேச்சுரர்

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் அமைந்துள்ள ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் நேற்று குருந்த மரத்தடியில் சிவபெருமான் அருட்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

குறித்த ஆலயத்தில் கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

மரபு நெறி தவறாது இவ்வாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பூஜைகளில் சுவிற்சர்லாந்து வாழ் அடியார்கள் தவறாது பங்கெடுத்து பக்தி வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சைவமும் தமிழும் இளந்தமிழச் சமூகத்தின் நினைவில் நிறுத்த, திருவிழாவில் பல சிறப்பு நிகழ்வுகள் ஞானலிங்கேச்சுரத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்