சுவிஸ் முகாமில் கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட அகதி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகள் முகாமில் நிகழ்ந்த தகராறில் நபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Buchs நகரில் அகதிகள் முகாம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த முகாமில் ஜோர்ஜியா நாட்டை சேர்ந்த 35 மற்றும் 36 வயதான இரண்டு நபர்கள் தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் இந்த இரண்டு நபர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இத்தகராறு வலுவடைந்ததை தொடர்ந்து 36 வயதான நபர் கத்தியை எடுத்து 35 வயதான நபரை சரமாரியாக குத்தியுள்ளார்.

எதிர்பாராத இத்தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், காயம் ஆழமாக இருந்ததாலும் அதிகளவில் ரத்தப்ப்போக்கு ஏற்பட்டதாலும் சிகிச்சை பலனின்றி நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இக்கொலை தொடர்பாக தகவல் அறிந்து 3 மணியளவில் முகாமிற்கு வந்த பொலிசார் 36 வயதான நபரை கைது செய்தனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் அகதிகள் முகாம் சுற்றி தடுப்பு போடப்பட்டது.

கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் நபர் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்