கறுப்பு பணம் விவகாரம்: இந்தியாவிற்கு பயணமாகிறார் சுவிஸ் ஜனாதிபதி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

கறுப்பு பணம் விவகாரம், பொருளாதார ஒப்பந்தம் உள்ளிட்ட விடயங்களை ஆலோசிக்க இந்தியாவிற்கு சுவிஸ் ஜனாதிபதி பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் ஜனாதிபதியான Doris Leuthard 3 நாள் பயணமாக எதிர்வரும் ஆகஸ்ட் 30-ம் திகதி இந்தியாவிற்கு செல்கிறார்.

advertisement

இப்பயணத்தின்போது இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டவர்களை சுவிஸ் ஜனாதிபதி சந்திக்கிறார்.

சுவிஸ் ஜனாதிபதியுடன் அந்நாட்டு முக்கிய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களும் பயணமாக உள்ளனர்.

இச்சந்திப்பில் இரு நாடுகளின் உறவு, வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இந்திய அரசு தரப்பில் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் குறித்து தகவல்கள் அளிக்க வலிறுத்தபடவுள்ளது.

இதுமட்டுமில்லாமல், சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளின் பங்களிப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த யூன் மாதம் இந்திய பிரதமர் மோடி சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டபோது Nuclear Suppliers Group (NSG) குழுவில் இந்தியா இடம்பெற சுவிட்சர்லாந்து ஆதரவு அளித்தது.

இந்தியாவில் அரசு முறைப்பயணமாக கடந்த 1998, 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் மூன்று சுவிஸ் ஜனாதிபதிகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்