7 பெண்களுக்கு பாலியல் சித்திரவதை: மர்ம நபருக்கு 8 ஆண்டுகள் சிறை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் ஆப்பிரிக்க பெண்களுக்கு போதை மருந்து தந்து பாலியல் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத அந்த 63 வயது நபர் ஆப்பிரிக்க பெண்கள் 7 பேரை தமது குடியிருப்பில் அமைந்துள்ள பிரத்யேக அறையில் வைத்து போதை மருந்து அளித்து பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த 7 பெண்களையும் அந்த நபர் இணையத்தில் உள்ள டேட்டிங் தளம் வாயிலாக தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் நேரில் சந்தித்தபோது அவர்களுக்கு அளித்த குளிர் பானத்தில் போதை மருந்து கலந்துள்ளார்.

தொடர்ந்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட குறித்த நபர் பெண்களின் ஒப்புதலுடைனையே தாம் நடந்து கொண்டதாகவும், போதை மருந்து தந்தது உண்மை எனவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

குறித்த நபருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் பெருவெள்ளத்தின்போது சோதனை மேற்கொண்ட மீட்புக்குழு காவலர் ஒருவர் போதை மருந்து செடிகள் வளர்ப்பதை அறிந்து பொலிசாருக்கு எச்சரித்துள்ளார்.

இதனையடுத்தே அந்த நபர் மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் அந்த கட்டிடத்தின் உள் அறை ஒன்றில் சித்திரவதை கூடம் ஒன்றை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த அறையில் பல எண்ணிக்கையிலான வீடியோ பதிவுகளும் அதில் கொடூர காட்சிகளும் அடங்கியிருந்தன.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த நபர் 2010 நவம்பர் முதல் 2013 டிசம்பர் வரையான காலகட்டத்தில் அந்த 7 பெண்களையும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது.

மட்டுமின்றி, குறித்த பெண்களுக்கு தாம் பணம் வழங்கியுள்ளதாகவும், தனது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டதாகவும் அந்த நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம் குறித்த நபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்