சுவிஸில் தற்போதைய முக்கிய பிரச்சனை என்ன? வெளியான சர்வே முடிவுகள்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிற்சர்லாந்தில் வயதான மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தான் தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் செயல்படும் World Economic Forum என்ற அமைப்பு சுவிஸ் மக்களிடம் பல்வேறு விடயங்கள் குறித்து ஆய்வு நடத்தியது.

அதன் முடிவில், வயதான மக்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருவது தான் தற்போதைய தீவிர பிரச்சனை என 63 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமத்துவமின்மை பிரச்சனை பெரியது என 51 சதவீதம் பேரும், வானிலை மாற்றம் பெரிய பிரச்சனை என 38 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு 18லிருந்து 35 வயதுக்குள் இருக்கும் நபர்களிடம் எடுக்கப்பட்டது.

சுவிஸில் வேலைவாய்ப்புகள் குறித்து கேட்கப்பட்ட கேள்வியில், 23 சதவீத இளைஞர்கள் வேலை பாதுகாப்பு என்பது சமுதாயத்தில் கேள்விகுறியாக உள்ளது என கூறியுள்ளனர்.

எல்லோருக்கும் சமமான வேலைவாய்ப்பு என்பது இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் என 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

அதே போல நல்ல வேலை வாய்ப்புக்காக வேறு நாடுகளுக்கு செல்வதென்றால் அமெரிக்காவுக்கு தான் செல்வோம் என 19 சதவீதம் பேரும், கனடா என 13 சதவீதம் பேரும், ஜேர்மனி அல்லது பிரித்தானியா என 9.5 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்