குடிபோதையில் காவல் நிலையத்திற்கு காரை ஓட்டிச்சென்ற நபர்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் நபர் ஒருவர் குடிபோதையில் காவல் நிலையத்திற்கு துணிச்சலாக காரை ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் லூசேர்ன் நகரை சேர்ந்த 61 வயதான நபர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் குடிபோதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக ஓட்டுனர் உரிமையை இழந்துள்ளார்.

பின்னர், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மீண்டும் குடிபோதையில் பலமுறை காரை ஓட்டியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குடிபோதையில் கார் ஓட்டியதாக நபர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இப்புகாரை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வருமாறு அந்நபருக்கு நேற்று பொலிசார் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ஆனால், நபரிடம் விசாரணை செய்தபோது அவர் காவல் நிலையத்திற்கும் குடிபோதையில் கார் ஓட்டி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிகளை பலமுறை மீறிய குற்றத்திற்காக அவரது காரை பறிமுதல் செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்