நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் கோளாறு: விமானி எடுத்த அதிரடி முடிவு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றில் திடீரென கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து புறப்பட்ட இடத்திற்கே அவசரமாக திரும்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள Kloten விமான நிலையத்தில் இருந்து Singapore Airlines என்ற பயணிகள் விமானம் கடந்த சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டுக்கு புறப்பட்ட இந்த விமானத்தில் 342 பேர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

சிறிதும் தாமதிக்காத விமானி உடனடியாக விமானத்தை திருப்பிக்கொண்டு சுவிஸை நோக்கி விரைந்துள்ளார்.

பின்னர், அதிகாலை 3.05 மணியளவில் சூரிச்சில் தரையிறங்கியுள்ளது.

இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானக் குழுவினருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

விமானிகள் தங்கியிருக்கும் காக்பிட் அறையில் ஓக்ஸிசனை காட்டும் திரையில் கோளாறு ஏற்பட்டதால் விமானத்தை திருப்பியதாக விமானிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் இருந்த கோளாறுகள் சரி செய்யப்பட்ட நிலையில் விமானம் காலை 8.20 மணிக்கு மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டுள்ளது.

காலை நேரத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் சுமார் 8 மணி தாமதமாக சிங்கப்பூரில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்