டாக்சியில் சென்ற பயணி செய்த செயல்: கைது செய்த பொலிசார்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

டாக்சியில் இத்தாலியிலிருந்து சுவிற்சர்லாந்து வந்த பயணி வாகன வாடகை செலுத்தாமல் தப்பியோடிய நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

இத்தாலியின் Milan நகரிலிருந்து சுவிஸின் Zurich நகருக்கு டாக்சியில் பயணி ஒருவர் கடந்த புதன்கிழமை வந்தடைந்தார்.

டாக்சியிலிருந்து கீழே இறங்கிய பயணி, வாகன ஓட்டுனருக்கு பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து பொலிசாரிடம் டாக்சி ஓட்டுனர் புகார் கொடுக்க, தப்பியோடிய நபரை பொலிசார் தேடி வந்தார்கள்.

இந்நிலையில், தீவிர தேடுதலுக்கு பின்னர் வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் குறித்த நபரை பொலிசார் Zurich ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தார்கள்.

டாக்சியில் பயணிக்கும் போது சந்தேகப்படும் படி பயணி நடந்து கொண்டதாக ஓட்டுனர் கூறியுள்ள நிலையில், பொலிசார் அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்