சுவிஸில் சிறை தண்டனை பெற்ற பிரித்தானியர்கள் மூவர் விடுதலை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிவேகமாக கார்களை ஓட்டிய குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய நாட்டை சேர்ந்த 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் Cannon Run கார் பந்திய விளையாட்டு மிகவும் பிரபலமானது ஆகும்.

advertisement

ஐரோப்பாவில் நாடு விட்டு நாடு கடந்து சென்று இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வெற்றி பெறுவார்கள்.

இதுபோன்ற ஒரு நிகழ்வு கடந்த யூன் மாதம் நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்தில் தொடங்கிய விளையாட்டு போட்டி மோனோகோ நாட்டில் நிறைவு பெறுவதாக திட்டமிடப்பட்டது.

இப்போட்டியில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Julian Wilson(40), David Bentley(49) மற்றும் Adrian Harrold(45) ஆகிய மூவர் கலந்துக்கொண்டனர்.

போட்டி தொடங்கியதும் இங்கிலாந்து நாட்டை கடந்த மூவரும் சுவிஸில் உள்ள சூரிச் நகர் வழியாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், சாலை விதிகளை மீறி கார்களை ஓட்டிய குற்றத்திற்காக மூவரும் சுவிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

மணிக்கு 177 கி.மீ வேகத்தில் பயணம் செய்த மூவருக்கும் சுவிஸ் நீதிமன்றம் 14 மாதங்கள் வரை சிறை தண்டனை விதித்தது.

எனினும், மூவரின் வழக்கில் அதிரடி திருப்பமாக 3 மாதங்களுக்கு பின்னர் தற்போது மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்