நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 குழந்தைகள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருப்பு ஒன்றில் தீவிபத்து நிகழ்ந்ததில் 4 குழந்தைகள் உள்பட 12 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேசல் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 4 குழந்தைகள் மற்றும் 3 வாலிபர்கள் உள்பட 12 பேர் வசித்து வந்துள்ளனர்.

advertisement

இந்நிலையில், நேற்று இரவு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், அறையில் இருந்த குழந்தைகள் அலறியுள்ளனர்.

உடனே பெண் ஒருவர் எழுந்து சென்று பார்த்தபோது அறை முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் கரும்புகை வேகமாக பரவியுள்ளது.

4 குழந்தைகளையும் உடனடியாக மீட்ட அப்பெண் 3 வாலிபர்களையும் காப்பாற்றியபோது அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக குடியிருப்பிற்கு விரைந்துள்ளனர்.

சில மணி நேரம் போராடிய பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. 4 குழந்தைகள் உள்பட பெண்ணும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், வீட்டில் திரும்ப வசிக்க முடியாத அளவிற்கு தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

தீ விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்கிய பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்