கொடூரமாக கற்பழிக்கப்பட்ட பெண்: உதவிக்கு வராத பொதுமக்கள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் ஒருவர் கொடூரமாக பல முறை கற்பழிக்கப்பட்டபோது பொதுமக்கள் யாரும் உதவிக்கு வராமல் தவிர்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேசல் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் நேற்று இரவு 11 மணியளவில் நபர் ஒருவரை சந்திக்க உணவகத்திற்கு சென்றுள்ளார்.

advertisement

இருவரும் உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டபோது பெண்ணை தன்னுடன் வருமாரு நபர் கேட்டதாக கூறப்படுகிறது.

முகவரி தெரியாத பெண்ணும் அவருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, பெண்ணை மிரட்டிய நபர் அவரை பலவந்தமாக கற்பழித்துள்ளார்.

நபரிடம் இருந்து தப்பிக்க பெண் பலமுறை உதவிக்கேட்டு அலறியுள்ளார். ஆனால், யாரும் உதவிக்கு வரவில்லை.

இரவு முழுவதும் அந்நபர் பெண்ணை பலமுறை கற்பழித்ததாக கூறப்படுகிறது. எனினும், அதிகாலை 6.30 மணியளவில் நபரிடம் இருந்து தப்பிய பெண் பொலிசாரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

ஆனால், வீட்டு முகவரியும் அவர் தங்கியிருந்த தெருவின் பெயரும் அவருக்கு தெரியவில்லை.

இதுக்குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு யாரும் உதவிக்கு செல்லாதது வேதனையாக உள்ளது.

பெண்ணை கற்பழித்த நபர் அவரிடம் ஸ்பெயின் மொழியில் பேசியதாக தெரியவந்துள்ளது.

மேலும், இக்கற்பழிப்பு குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்