கொடூரமாக கொல்லப்பட்ட குத்துச்சண்டை வீரர்: சூதாட்ட விவகாரம் காரணமா?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் துர்கவ் மாகாணத்தில் உள்ள Erlen என்ற கிராமத்தில் பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் வசித்து வருகிறார்.

கடந்த யூலை மாதம் காட்டுப்பகுதிக்கு பெண் நடைப்பயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சடலம் மிகவும் சேதம் அடைந்துள்ளதால் பொலிசாரால் அடையாளம் காணமுடியவில்லை.

பின்னர், நீண்ட நாட்களாக நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முடிவில் கொல்லப்பட்ட நபர் செர்பியாவை சேர்ந்த Branislav(41) என்ற குத்துச்சண்டை வீரர் என தெரியவந்துள்ளது.

துர்கவ் மாகாணத்தில் அவர் ஒரு தனியார் பாதுகாவலர் பணியை செய்து வந்துள்ளார்.

இக்கொலை குறித்து விசாரணையை தொடங்கியபோது, குத்துச்சண்டை போட்டியின்போது சூதாட்டம் ரகசியமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இச்சூதாட்டத்தின் விளைவாக குத்துச்சண்டை வீரர் கொல்லப்பட்டுருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

குத்துச்சண்டை வீரர் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்