ஜெனிவா சாலையில் சிலம்பம் சுற்றிய வைகோ: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

ஜெனிவா நகர வீதியில் வைகோ சிலம்பம் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில் மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ஆம் திகதி தொடங்கி 29-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

advertisement

இந்த அமர்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டுள்ளார். ஈழதமிழர்களின் உரிமை குறித்து வைகோ அங்கு பேச சில சிங்களர்கள் அவரை தாக்க முயன்றனர்.

இதையடுத்து அவருக்கு ஐ.நா. சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெனிவா நகர வீதிகளில் நேற்று பகலில் கூடாரம் அமைக்கும் பணி நடைப்பெற்றது.

அப்போது அங்கிருந்த ஒரு கொம்பை எடுத்து வைகோ சாலையில் லாவகமாக சிலம்பம் சுற்றினார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்