அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் ஞானாம்பிகை அன்னையின் திருத்தேர்விழா

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
159Shares
159Shares
lankasrimarket.com

கொடியவர்களை அழித்து நல்லோரைக் காக்க அன்னை பெருந்தேவி ஞானாம்பிகை திருவுள்ளம் கொண்டு முப்பெருந்தேவியருடன் இணைந்து மகிசாசூரனை வதம் செய்து விண்ணவரைக் காத்தருளிய விழாவே ஒன்பான் இரவாக (நவராத்திரியாக) கொண்டாடப்படுவதாக நோக்கப்படுகிறது.

பாரத நாட்டை எடுத்துக்கொண்டால் 20,000 மேற்பட்ட வாய்மொழிகள் பேசப்படும் பெருநிலமாகும். ஆக பல்லாயிரம் விளக்கத்துடன் ஒன்பது இரவு நோன்பு விளக்கப்படுகிறது.

ஆனால் தமிழர்கள் வாழ்வில் கலைமகள், திருமகள், மலைமகள் முப்பெரும் தேவியர் வழிபாடு பலவகையில் இருந்துவந்த வழிபாடே ஆகும்.

தொன்மைத் தமிழர்கள் பெண்களை நெஞ்சிலும், நாவிலும், உடலிலும் நிறுத்தியே பெண்மையைப் பெருமைப்படுத்தி வந்துள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் சைவநெறியை மறுமலர்ச்சியுடன் ஒழுகும் சைவநெறிக்கூடத்தால் அறங்காவல் செய்யப்படும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் ஒன்பானிரவு (நவராத்திரி) பெருவிழாவாக திருக்கொடியேற்றத்துடன் தொடங்கப்பெற்று வெள்ளிக்கிழமை நேற்று திருத்தேரோட்டத்துடன் மிகு சிறப்பாக நடைபெற்றது.

பல ஆயிரம் குழந்தைகள், சிறார்கள், இளையோர், பெண்கள், ஆண்கள், முதியோர் என அனைத்து வயதினரும் பங்கெடுத்த விழாவாகவும் திங்கட்தேராக மாலை நேரம் பேர்ன் ஐரோப்பாத்திடலில் தேரோட்டம் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான சுவிஸ் நாட்டவர்களும் விழாவைக் கண்டு நிறைந்தனர்.

ஈழத்தில் இருந்து வருகை அளித்திருக்கும் மதுசூதனன் குழுவினர் தமது மங்கல இசையால் அடியார்கள் பத்தியில் மனம் குளிர வைத்தனர்.

ஐரோப்பாத்திடலை தேரில் வலம்வந்த முப்பெருந்தேவியருக்கு வழிபாடு முதல், இறைதிருவுருவைத் தம் தோள்களில் காவியும், தேரை வடம் பிடிடத்து இழுத்ததும் பெண்காளாக இருந்தது மேலும் சிறப்பாக அமைந்தது.

தேவர்வலம் வந்து முடிந்ததும், திருக்கோவிலுக்குள் பல இளந்தமிழ்ச் செல்வங்கள் தமது கலைத்திறனால் அன்னைக்கும் அடியார்களுக்கும் சிறப்பு கலைவிருந்து படைத்தளித்தனர்.

அன்னை ஞானாம்பிகையின் திருவருளால் ஞானலிங்கேச்சுரம் சைவம் தமிழ் நிறைந்து காட்சியளித்தது, நிறைவில் பல்சிறப்பு அருளுணவு வழங்கி வழிபாடுகள் நிறைவுற்றது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்