பேரழிவால் தவித்த சுவிஸ் கிராமம்: நன்கொடையை அள்ளி கொடுத்த மக்கள்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிஸின் Bondo கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பேரழிவு ஏற்பட்ட நிலையில் அங்கு வசித்தவர்களுக்கு உதவ சுவிஸ் மக்கள் நன்கொடை அளித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Bondo கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக அங்கிருந்த சாலைகள், வீடுகள், வர்த்தக கட்டிடங்கள் உள்ளிட்ட பல இடங்கள் முழுமையாக சேதமடைந்தன.

நிலச்சரிவுக்கு முன்னரே கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் அவர்கள் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை.

இந்நிலையில், சேதமடைந்த விடயங்களை சீர்ப்படுத்த தனியார் குழு சுவிஸ் மக்களிடம் நன்கொடை வசூலித்து வந்தது.

தற்போது ஐந்து மில்லியன் francs-க்கும் அதிகமான பணம் நன்கொடையாக கிடைத்துள்ளது.

ஏற்கனவே 55 குடும்பங்கள் மற்றும் சிறு தொழில்களுக்கு 164,000 francs உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

நன்கொடையின் பெரும்பகுதி வீடுகள், வர்த்தக கட்டிடங்களை சீரமைக்கவும், உள்கட்டமைப்புகளை ஒழுங்குப்படுத்தவும் செலவிடப்படவுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்