பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க அரசுக்கு கோரிக்கை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சுவிட்சர்லாந்து நாட்டில் பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க வேண்டும் என அந்நாட்டை சேர்ந்த சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி இக்கோரிக்கையை விடுத்துள்ளது.

advertisement

இதுக்குறித்து கட்சியின் இளைஞர் பிரிவு தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பணிக்கு செல்லாமல் தங்களது சொத்துக்கள் மூலம் அதிகளவில் வருவாய் ஈட்டும் பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிக்க வேண்டும்.

குறிப்பாக, வருடத்திற்கு ஒரு லட்சம் பிராங்க் வரை வருவாய் ஈட்டும் பணக்காரர்கள் செலுத்தும் வரியை 150 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும்.

பணக்காரர்களுக்கு கூடுதலாக வரி விதிப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரி சுமை வெகுவாக குறைக்கப்படும்.

இதுமட்டுமில்லாமல், இக்கூடுதல் வரி விதிப்பால் அரசாங்கத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 பில்லியன் பிராங்க் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இத்தொகையை நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இக்கோரிக்கை தொடர்பாக 1,00,000 கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் பொதுவாக்கெடுப்பின் மூலம் அரசாங்கத்தின் அனுமதி பெறப்படும் எனவும் சுவிஸ் சோசியலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்