நோபல் விருதை வென்று சாதனை படைத்த சுவிஸ் விஞ்ஞானி

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வேதியல் பிரிவில் நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூசன்னே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய Jacques Dubochet என்பவருக்கு தான் வேதியலுக்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

வேதி மூலக்கூறுகளை எளிமையாகவும் திறம்படவும் பார்க்கும் வழிமுறைகளை கண்டுபிடித்த சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.

இதுமட்டுமில்லாமல், இவருடன் அமெரிக்காவை சேர்ந்த Joachim Frank மற்றும் ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த Richard Henderson ஆகிய இருவருக்கும் இந்த விருது பகிர்ந்து வழங்கப்படுகிறது.

நோபல் விருதை வென்ற Jacques Dubochet செய்தியாளர்களை சந்தித்தபோது ‘நோபல் பரிசு கிடைத்துள்ளது மிகவும் உற்சாகமாக உள்ளது.

தற்போது சாதனை படைத்திருந்தாலும் பள்ளி காலத்தில் படிப்பில் மிகவும் பின் தங்கி இருந்ததாகவும், ஆசிரியர்கள் தான் முன்னேற முடியாது எனவும் கடுமையாக கண்டித்தனர்.

மேலும், சிறு வயதில் இருட்டை கண்டால் அச்சப்படும் ஒருவித மனநோயிற்கும் உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

எனினும், அனைத்து தடைகளையும் முறியடித்துவிட்டு அறிவியல் பாடத்தில் முழு கவனம் செலுத்தி தற்போது நோபல் பரிசு வெல்லும் வரை முன்னேறியுள்ளதாக Jacques Dubochet உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்