சுவிஸில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் அகதி: கூடுதல் தகவல்கள் வெளியீடு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com
advertisement

சுவிட்சர்லாந்து நாட்டில் தகராறில் ஈடுப்பட்ட தமிழ் அகதி ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் உள்ள வார்டு எண்:6, புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சுப்ரமணியம் கரன்(38). இவருக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ளனர்.

advertisement

கரன் கடந்த 2015-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புகலிடம் கோரி சென்று அங்குள்ள டிசினோ மாகாணத்தில் வசித்து வந்துள்ளார்.

Brissago நகரில் உள்ள டவுன் ஹால் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இலங்கையை சேர்ந்த அகதிகள் கடந்த 8 ஆண்டுகளாக தங்கி வருகின்றனர்.

இவர்களில் ஒருவராக கரனும் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று பிற்பகல் நேரத்தில் கரனுடன் தங்கியிருந்த இரண்டு இலங்கை அகதிகளுக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

உயிருக்கு அச்சப்பட்ட இருவரும் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற பொலிசார் அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர். பொலிசாருடன் புகார் அளித்த இரண்டு பேரும் சென்றுள்ளனர்.

அப்போது, கோபத்தின் உச்சியில் இருந்த கரன் இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு பொலிசாருடன் வந்த இருவர் மீது தாக்குதல் நடத்த பாய்ந்துள்ளார்.

இருவரையும் காப்பாற்றும் பொருட்டு வேறு வழியின்றி கரன் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நிகழ்த்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் கரன் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். பொலிசார் விரைந்து சென்று முதலுதவி அளித்துள்ளனர்.

advertisement

ஆனால், படுகாயம் அடைந்த கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுக்குறித்து பொலிஸ் உயர் அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், ‘பொலிசார் மற்றும் இரண்டு இலங்கை அகதிகளின் உயிரை காப்பாற்ற இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

எனவே, நடவடிக்கை எடுத்து பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்.

முகாமில் இலங்கை அகதிகள் மத்தியில் எழுந்த தகராறு தான் இத்தாக்குதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எனினும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விரிவான விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்