பாலியல் தொழிலாளியை கொன்ற நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் பாலியல் தொழிலாளியை கொலை செய்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

பேர்ன் மாகாணத்தில் உள்ள பையில் நகரில் 37 வயதான நபர் ஒருவர் அங்கி அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

ஊதியம் அதிகமாக ஈட்டியதால் பணத்தை தண்ணீராக செலவழித்து வந்துள்ளார்.

குறிப்பாக, உயரிய மது வகைகள் அழகிய பாலியல் தொழிலாளிகள் போன்ற உல்லாசங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் வறுமையில் வாடியுள்ளார்.

தன்னிடம் இருந்த விலைமதிப்பற்ற பொருட்களை விற்பனை செய்து பாலியல் தொழிலாளிகளிடம் சென்று வந்துள்ளார்.

ஆனால், நபரிடம் போதிய பணம் இல்லாததால் பாலியல் தொழிலாளிகள் அவரிடம் செல்வதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.

மேலும், நபருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த பாலியல் தொழிலாளி ஒருவர் அவரை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் மிகவும் வேதனையில் இருந்த அவருக்கு பிரேசில் நாட்டை சேர்ந்த 45 வயதான பாலியல் தொழிலாளியின் நட்பு கிடைத்துள்ளது.

ஆனால், மாதங்கள் சென்ற நிலையில், அவரிடம் பணம் இல்லாததால் அவரை விட்டு விலக பாலியல் தொழிலாளி தீர்மானித்துள்ளார்.

இதனை அறிந்த நபர் விரக்தியின் உச்சத்துக்கு சென்றுள்ளார். தன்னை விட்டு பிரிந்து செல்ல முயலும் அவர் உயிருடன் இருக்க கூடாது என தீர்மானித்து ஹொட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொழிலாளியை கொலை செய்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக நபருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. இத்தீர்ப்பினை எதிர்த்து நபர் மேல் முறையீடு செய்துள்ளார்.

இம்மேல் முறையீட்டு வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, கொலை குற்றம் புரிந்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது சரியான தீர்ப்பு எனக் கூறி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்