உணவு திருவிழாவில் அசத்த போகும் இலங்கை தமிழர்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அகதிகள் உணவு திருவிழாவில் சமையல் கலைஞரான இலங்கை தமிழர் ஒருவர் தனது திறமையை வெளிகாட்ட ஆர்வமாக உள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அக்டோபர் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை ஐந்து முக்கிய ஹொட்டல்களில் அகதிகள் உணவு திருவிழா நடக்கிறது.

இதை Food Sweet Food சங்கமும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது.

இதில் இலங்கை, சிரியா, திபெத், நைஜீரியா போன்ற நாடுகளை சேர்ந்த அகதிகளும், புலம்பெயர்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்கள் சமையல் திறமையை காட்டவுள்ளனர்.

காலை உணவு, மதியம் அல்லது இரவு உணவுகளை அவர்கள் தயார் செய்து ஜெனிவா மக்களுக்கு தரவுள்ளனர்.

வரும் 15ஆம் திகதி Brasserie des Halles de l’Ile ஹொட்டலில் இலங்கை தமிழரான தம்பிதுரை ஸ்ரீதரன் தனது சமையல் திறமையை காட்டவுள்ளார்.

தம்பிதுரை கடந்த வருடம் ஜனவரி மாதன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம் பெயர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், நான் பல ஆண்டுகளாக பல இடங்களில் சமையல் செய்துள்ளேன். சுவிஸ்க்கு வந்த பின்னர் என்னுடன் தங்கும் நபர்களுக்கு சமைத்து கொடுத்துள்ளேன்.

சில சமயம் ஒரே நேரத்தில் 200 பேருக்கு கூட உணவு சமைத்து கொடுத்துள்ளேன். இலங்கை போரின் போது பலர் உணவு பற்றாக்குறையால் தவித்தார்கள். இதையடுத்து மக்களை உணவு மூலம் சந்தோஷப்படுத்த முயல்கிறேன்.

இலங்கை உணவுகள் பல்வேறு சுவைகளை கொண்டது. அதை ஜெனிவாவில் உள்ள புதிய மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.

அகதிகள் உணவு திருவிழா என் திறமையை காட்ட உதவுவதோடு எனக்கு ஜெனிவாவில் நல்ல வேலை கிடைக்கவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

இதோடு, அகதிகள் மீதான எதிர்மறையான உணர்வுகள் இதன் மூலம் மாறும் எனவும் நம்புகிறேன்.

நான் இதுவரை எந்தவொரு எதிர்மறை விடயங்களையும் சுவிஸில் எதிர்கொண்டது இல்லை. இங்கு நான் பாதுகாப்பாக உணர்கிறேன்.

சுவிஸ் கலாச்சாரத்தில் உள்ள மனித உரிமைகளின் பலம் என்னை போன்றவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை தரும் என உணர்வதாக தம்பிதுரை கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்