பொலிஸ் வாகனத்தை தாக்கிய நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com
advertisement

பொலிசாரின் வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர்களுக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் கடந்தாண்டு மே மாதம் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

advertisement

இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக பொலிசார் முயற்சி செய்துள்ளனர்.

அப்போது, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Joachim Landwehr என்பவர் பொலிசாரின் வாகனத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இக்காட்சிகள் கமெராவில் பதிவாகியுள்ளது, இச்சம்பவத்தை தொடர்ந்து அவர் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இக்கலவரம் தொடர்பாக பாரீஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

அப்போது, பொலிசாரின் வாகனத்தை தீயிட்டு எரித்த சுவிஸ் குடிமகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது.

மேலும், வன்முறையில் ஈடுப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட Antonin Bernanos மற்றும் Nicolas Fensch ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்