குடும்ப சண்டைகளை தடுக்க அரசு புதிய திட்டம்: இது சாத்தியமாகுமா?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகரித்து வரும் குடும்ப சண்டைகளை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் குடும்ப சண்டைகள் தொடர்பாக 17,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 55 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதுமட்டுமில்லாமல், குடும்ப பிரச்சனைகள் காரணமாக ஒரு சிறுமி உள்ளிட்ட 18 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அதிகரித்து வரும் இப்பிரச்சனையை தடுக்கும் வகையில் அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இப்புதிய திட்டத்தின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய அல்லது பிரச்சனைக்குரிய குடும்ப உறுப்பினர்களின் கைகளில் பிரேஸ்லெட் எனப்படும் வளையல் போன்ற கருவி அணிவிக்கப்படும்.

இக்கருவியை அணிந்தவரின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும்.

இவரை தாக்க முயன்றால் அல்லது தாக்குதலுக்கு உள்ளானால் இக்கருவி மூலம் உடனடியாக தகவல் பரிமாறப்பட்டு உதவிக்கு பொலிசார் விரைவார்கள்.

மேலும், இக்கருவியில் பதிவாகும் தகவல்கள் அடிப்படையில் ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றம் நிரூபிக்கப்படும்.

தற்போது நாடாளுமன்றத்தில் இத்திட்டம் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இதற்கான இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்