செஞ்சிலுவை சங்கத்தில் பல மில்லியன் டொலர் ஊழல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

மேற்கு ஆப்பிரிக்க நாட்டை சுழன்று தாக்கிய எபோலா காய்ச்சலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் சுமார் 6 மில்லியன் டொலர் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியர்ரா லியோன், கினியா மற்றும் நைஜீரியாவில் கடந்த 2014 மற்றும் 2016 ஆண்டுகளில் எபோலா வைரஸ் தாக்கியதில் 11,300 பேர் பலியாகினர்.

சுமார் 29,000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் சுமார் 6 மில்லியன் டொலர்கள் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அந்த அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பகுதியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பு தற்போது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சியர்ரா லியோனில் மட்டும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் இணைந்து சுமார் 2.1 மில்லியன் டொலர் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.

ஊழல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை மிக விரைவில் மெற்கொள்ள இருப்பதாகவும் செஞ்சிலுவை சங்கம் உறுதி அளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்