சுவிஸ் வங்கி 135 மில்லியன் டொலர் அபராதம் செலுத்த அமெரிக்கா உத்தரவு

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிட்சர்லாந்து நாட்டில் செயல்படும் Credit Suisse வங்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக 135 டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவிஸின் சூரிச் நகரில் செயல்பட்டு வரும் Credit Suisse வங்கி உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்குகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பணம் பரிவர்த்தனை செய்தபோது வங்கி அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக, கடந்த 2008 முதல் 2015-ம் ஆண்டு வரை அமெரிக்க வாடிக்கையாளர்களின் சொத்துக்களை மறைத்து சலுகைகளை வழங்கியது, பணம் பரிவர்த்தனை செய்தபோது முரணான அந்நிய செலாவணி விகிதங்களை நிர்ணயம் செய்தது உள்ளிட்ட குற்றங்களை அமெரிக்காவின் DFS நிறுவனம் சுவிஸ் வங்கி மீது வழக்கு பதிவு செய்தது.

இவ்வழக்கின் இறுதியில் சுவிஸ் வங்கியின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. மேலும், இக்குற்றங்களுக்காக வங்கி அபராதம் செலுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சுவிஸ் வங்கி அமெரிக்காவிற்கு 135 மில்லியன் டொலர் அபராதமாக செலுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், இந்த அபராத தொகையை செலுத்த தயார் எனவும் சுவிஸ் வங்கி அறிவித்துள்ளது. முறைகேடுகளில் ஈடுப்பட்டு அபராதம் செலுத்துவது இது முதல் முறை அல்ல.

வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக கடந்த 2009-ம் ஆண்டு UBS என்ற சுவிஸ் வங்கி 780 மில்லியன் டொலரும், வாடிக்கையாளர்களின் சொத்துக்களை மறைத்த குற்றத்திற்காக Credit Suisse வங்கி கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு 2.5 பில்லியன் டொலர் அபராதமும் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்