சுவிசில் தோழி கண்முன்னே நடந்த விபரீத சம்பவம்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் Rolle நகரில் ரயில்வே டிராக்கை கடக்க முயன்ற 15 வயது சிறுவன் பரிதாபமாய் பலியானான்.

கடந்த சனிக்கிழமையன்று 15 வயது சிறுவன், தனது தோழியுடன் நண்பர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது Rolle நகரில் ரயில்வே டிராக்கை கடக்க முற்பட்ட போது, லூசர்னே மாகாணத்தை நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தது.

இதனை அவதானித்த சிறுவன், தன் தோழியை எச்சரித்துள்ளார், ஆனால் எதிர்பாராதவிதமாக சிறுவன் விபத்தில் சிக்கிக் கொண்டான்.

சிறுவனை பார்த்த ஓட்டுனர், ரயிலை நிறுத்த முயற்சித்த போதும் பலனில்லாமல் போனதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்