ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு நிதியுதவி: விசாரணையில் சுவிஸ் குடும்பம்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
222Shares
222Shares
lankasrimarket.com

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதியுதவி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுவிஸ் நாட்டின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக மத்திய வழக்கறிஞர்கள் அலுவலகம்தெரிவித்துள்ளது.

சுவிஸின் Vaud மாகாணத்தில் வசித்து வரும் இரு சகோதரிகள் மற்றும் அவர்களில் ஒருவரது முன்னாள் கணவரே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மூவர் மீதும் சட்ட விதிகளை மீறி ஐஎஸ் இயக்கத்திற்கு நிதியுதவி செய்தததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இருசகோதரிகளில் ஒருவர் சிரியா வரை சென்று 6400 டொலர் மதிப்புள்ள பணத்தை ஐஎஸ் இயக்கத்தின் இடைத்தரகரிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்னதாக கடந்த மார்ச் மாதமே மற்றொரு சகோதரி 630 டொலர் நிதி அளித்தற்காக குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்கள் மூவர் மட்டுமல்லாது கடந்தாண்டு அதே குடும்பத்தைச்சேர்ந்த சிறுவன் ஐ.எஸ் இயக்கத்தில் சேரும் ஆசையோடு சிரியா வரை சென்று பின்னர் கைது செய்யப்பட்டுள்ளான்.

மேலும் இதுபோன்ற தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடைய குற்ற வழக்குகள் மட்டும் மொத்தம் 60-க்கு மேல் இருப்பதாக மத்திய வழக்கறிஞர்கள் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்