சுவிஸில் பொது இடங்களில் முகத்தை மூடிக்கொள்ள தடை!

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிட்சர்லாந்தின் St Gallen மாகாணத்தில் பொது இடத்தில் முகத்தை மூடிக்கொள்வதற்கு நிபந்தனைகளுடன் கூடிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் St Gallen மாகாண நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்மூலம் பொது இடங்களில் முகத்தை மூடிக்கொள்ள, நிஹாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது, இது போராட்டங்களின் போது முகத்தை மூடிக் கொள்பவர்களுக்கும் பொருந்தும்.

எனினும் உடல்நலம் மற்றும் காலநிலை தொடர்பில் முகத்தை மூடிக்கொள்ளவும், பெண் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆண்- பெண் பாகுபாடு காட்டி ஒருவரை வற்புறுத்தி முகத்தை மூடிக்கொள்ள செய்வதற்கு அனுமதியில்லை, பொது மக்களுக்கு அச்சுறுத்தல் அளித்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம்.

ஏற்கனவே கடந்தாண்டு Ticino மாகாணத்தில் முதன்முறையாக தடை அமுல்படுத்தப்பட்ட நிலையிலும், நாடு முழுவதும் தடை விதிக்க சுவிஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்