500 பயணிகளுடன் சென்ற ரயில் தடம் புரண்டது: நடந்தது என்ன?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிஸ் ரயில் நிலையத்துக்கு வந்த ரயில் ஒன்று தடம் புரண்டதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

ஜேர்மனியின் ஹம்பர்கிலிருந்து ரயில் ஒன்று சுவிட்சர்லாந்தின் பேசல் நகர் ரயில் நிலையம் நோக்கி புதன்கிழமை வந்து கொண்டிருந்தது.

அப்போது ரயிலின் மூன்று பெட்டிகள் திடீரென தடம் புரண்டது, குறித்த ரயிலில் 500 பயணிகள் இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

ஆனாலும் தண்டவாளத்தின் வழியிலுள்ள தொடர்பு புள்ளிகள் சேதமடைந்தன.

இதன் காரணமாக நேற்று வரை பேசல் நகர் வழியாக செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

அந்நகர் வழியாக செல்லும் தொலைதூர ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது எனவும் அதற்கான மாற்று வழித்தடங்களையும் சுவிஸ் பெடரல் ரயில்வே அறிவித்தது.

ரயில் தடம் புரண்டதற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில் வெள்ளிக்கிழமை வரை ரயில்கள் ரத்தானது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்