பெண் பொலிசுக்கு பாலியல் தொல்லை: 17 வயது இளைஞர் கைது

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் இடையே பெண் பொலிஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் கோலாகலமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நடுவே பல இடங்களில் கைது நடவடிக்கைகளும் அடிதடிகளும் நடந்துள்ளன.

சூரிச் மாகாணத்தில் தம்பதி ஒன்று 3 இளைஞர்களை சரமாரியாக தாக்கியதுடன், சம்பவயிடத்தில் இருந்து தப்பித்தும் சென்றுள்ளனர்.

இதில் இளம்பெண் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Bellevue பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பெண் பொலிசார் ஒருவரை 17 வயது இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பாஸல் மாகாணத்தில் மட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தினிடையே 58 பகுதிகளில் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

43 இடங்களில் மருத்துவ சேவைக்கு பரிந்துரைத்துள்ளனர். மட்டுமின்றி மது மற்றும் போதை மருந்து சம்பவம் தொடர்பாக 19 முறை பொலிசாரின் உதவியை நாடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்