சுவிஸின் மிக இளம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் ஆலன் பெர்சட்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் கடந்த 84 ஆண்டுகள் வரலாற்றில் மிக இளம் ஜனாதிபதியாக பொற்றுபேற்றவர் என்ற பெருமையை ஆலன் பெர்சட் பெற்றுள்ளார்.

ஜனவரி 1-ம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக ஆலன் தனது பணிகளை தொடங்கியுள்ளார்.

கடந்த 1972-ஆம் ஆண்டு பிறந்த ஆலனின் தற்போதைய வயது 45 ஆகும். 1934-லிருந்து இவரளவு வயது குறைவானவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில்லை.

சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆலன், சுவிஸ் பெடரல் உறுப்பினராகவும், உள்துறை விவகாரங்களுக்கான மத்திய துறையின் தலைவராகவும் உள்ளார்.

பன்முக திறமை கொண்ட ஆலன் பொருளாதார வளர்ச்சி, குடிபெயர்வு மற்றும் பிராந்திய வளர்ச்சி சம்மந்தாக 30 கட்டுரைகளும் சில புத்தகங்களும் எழுதியுள்ளார்.

ஆலன் கூறுகையில், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய யூனியன் உறவு முறை குறித்த விடயங்களில் எச்சரிக்கையாக செயல்படுவேன். அதிகளவில் சுவிஸ்க்கு குடியேறுபவர்களுக்கு எதிராக கடந்த 2014-ஆம் பிப்ரவரி மாதம் 9-ஆம் திகதி மண்டல மக்கள் வாக்களித்தார்கள்.

இந்த பிரச்சனை இன்னும் தீராமல் உள்ளது. இந்த குடியேற்ற இணைப்புக்கு எதிரான முயற்சிக்கு ஒரு உள்ளார்ந்த தீர்வை முதலில் கண்டுபிடிப்பது அவசியமாகும், அதை நோக்கி என் பயணம் இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்