திருடு போன வயலினை கண்டுபிடித்தால் £200 பரிசு: இசைக்கலைஞர் அறிவிப்பு

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
48Shares
48Shares
lankasrimarket.com

சுவிஸில் திருடுபோன தனது வயலினை தன்னிடம் கொடுப்பவர்களுக்கு £200 சன்மானம் வழங்கப்படும் என இசைக்கலைஞர் ஒருவர் அறிவித்துள்ளார்.

டேனியல் சண்ட்லர் (31) என்ற வயலில் இசைக்கலைஞர் உலகெங்கிலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார், இவர் பயன்படுத்தும் வயலின் சமீபத்தில் திருடு போனது.

வெளியில் சென்றுவிட்டு டேனியல் வீடு திரும்பி கொண்டிருந்த போது வீட்டின் வைக்கப்பட்டிருந்த வயலின் திருடு போய் விட்டதாக அவர் மனைவி போன் செய்து கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டேனியல் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

வயலினை கண்டுப்பிடித்து தன்னிடம் ஒப்படைப்பவர்களுக்கு £200 சன்மானம் வழங்கப்படும் என டேனியல் அறிவித்துள்ளார்.

வயலின் போன்ற பொருட்கள் திருடு போவது எப்போதாவது தான் நடக்கும் என பொலிசார் கூறியுள்ளனர்.

டேனியல் கூறுகையில், கடந்த 2003-ல் என் பெற்றோர் அந்த வயலினை எனக்கு பரிசாக அளித்தார்கள்.

இதனால் அந்த வயலின் என் மனதுக்கு மிக நெருக்கமானதாகும். என்னிடம் வயலின் இல்லாதது வருத்தமடைய செய்துள்ளது.

மீண்டும் வயலின் எனக்கு திரும்ப கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்