வங்கி ஊழியரின் விவரங்கள் அமெரிக்காவிடம் ஒப்படைப்பா? தடுத்து நிறுத்திய சுவிஸ் நீதிமன்றம்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

வரி ஏய்ப்பு செய்தவர்கள் குறித்த தகவல்களை ஒப்படைக்கும் வழக்குகளுடன் தொடர்புடைய வங்கி ஊழியர்கள் அல்லது வழக்குரைஞர்கள் போன்ற மூன்றாம் தரப்பினர் குறித்த தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கு எதிராக சுவிற்சர்லாந்தின் உயர்மட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் வாழும் அமெரிக்கர் ஒருவர் Swiss Federal Tax Administration (FTA), தனது வங்கியிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைப் பரிமாற்றம் செய்ததற்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை ஃபெடரல் நீதிமன்றம் உறுதிசெய்தது.

மூன்றாம் தரப்பு நபர்கள் குறித்த விவரங்கள் வழக்குக்கு பொருத்தமானவையாக இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

எந்த ஆவணங்களை அனுப்புவது என்பதை திட்டமாக முடிவுசெய்வதும், மோசடி செய்யாத நிரபராதிகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய தகவல்களை பரிமாற்றம் செய்வதைத் தவிர்ப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.

அத்தகவல், வரி ஏய்ப்பு செய்தவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு அத்தியாவசியமானது என்பதை மெய்ப்பிக்கும் வகையிலான விவாதத்தை FTA முன்வைக்கவில்லை என்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

மேலும், மூன்றாம் தரப்பினர் விதி மீறலில் ஈடுபட்டிருந்தால்கூட, அவர்களது அடையாளங்கள் இவ்வழியாக கோரப்பட்டிருக்கக்கூடாது.

அது நிர்வாக உதவிக்காக செய்யப்பட்டதாக இருந்திருக்க வேண்டுமேயொழிய வழக்கு சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்திருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு செய்பவர்களைக் குறித்த தகவல்களை வெளியிடும்படி, ஏராளமான வழக்குகளில் அமெரிக்கா சுவிஸ் வங்கிகளை நீதிமன்றத்திற்கு இழுத்ததன் காரணமாக சுவிஸ் வங்கிகளின் இரகசியம் காக்கும் தன்மை தேய்ந்து கொண்டே வருகிறது.

OECDஇன் வழிகாட்டுதலின்பேரில் தானியங்கு தகவல் பரிமாற்றத்தின்மீது செய்யப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின் காரணமாக, சுவிஸ் வங்கிகள், கோரிக்கைகளின் பேரில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளன.

புதனன்று வெளியிடப்பட்ட தீர்ப்பு இவ்வாறு இருந்தாலும், வெளிநாட்டு வரி ஏய்ப்பாளர்களுக்கு உதவும் வங்கி அலுவலர்களும் மேலாளர்களும் இனி வழக்குகளுக்கு தப்பமுடியாது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்