சுவிஸில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக ஆக்க கையெழுத்து இயக்கம்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
133Shares
133Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் கஞ்சா பயன்படுத்துவதை சட்டபூர்வமாக ஆக்க தனியார் குழு ஒன்று மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளது.

நாட்டில் மண்டல வாரியாக கஞ்சா பயன்பாடு குறித்த சட்டம் வேறுபடுகிறது. ஆனாலும் அதிகம் சக்தியில்லாத கஞ்சாக்கள் விற்க மட்டுமே சில மண்டலங்களில் அனுமதிக்கபடுகிறது.

இந்நிலையில் Legalize it என்ற குழு நாட்டில் கஞ்சாவை சட்டபூர்வமாக அனுமதிக்க கோரி கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளது.

இதற்காக 100,000 பிராங்குகள் நிதியை வசூலிக்கும் பணியும் நடந்து வருகிறது.

கையெழுத்து இயக்கம் நடத்தி இந்த விடயத்துக்கு தேசிய அளவில் ஓட்டெடுப்பு நடத்த வைக்கவேண்டும் என்பதே குழுவின் நோக்கமாக உள்ளது.

வரும் ஏப்ரலில் ஒரே நாளில் 400 நகரங்களுக்கு சென்று மக்களிடம் கையெழுத்து வாங்க திட்டம் உள்ளதாக Legalize it குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்