மனைவி பெயரைச் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை: சுவிஸ் ஆண்கள்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
308Shares
308Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் 2013ம் ஆண்டு சட்டத்திருத்தங்களுக்குப்பின் ஆண்கள் தங்கள் பெயருடன் மனைவியின் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால் Federal Statistical Office (FSO) மேற்கொண்ட ஒரு ஆய்வில், வெகு சில ஆண்களே தங்கள் பெயரில் மாற்றம் செய்ய முன்வந்துள்ளது தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டு 70 சதவிகித பெண்கள் திருமணத்திற்குப்பின் தங்கள் பெயருடன் கணவர் பெயரைச் சேர்த்துக்கொண்டனர், ஆனால் 2 சதவிகிதம் சுவிஸ் ஆண்களே மனைவி பெயரைச் சேர்த்துக்கொள்ள முன்வந்தனர்.

என்றாலும், வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் சுவிஸ் பெண்களைத் திருமணம் செய்யும்போது மனைவி பெயரைச் சேர்த்துக்கொள்ள மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருமண ஏற்பட்டாளரான Jane Finger மணப்பெண் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே ஆண்கள் அவர் பெயரைச் சேர்த்துக்கொள்ள விரும்புகின்றனர், இதற்குக் காரணம் சுவிஸ் பெயர் இருந்தால் வேலைவாய்ப்புகள் அதிகம் என்பதுதானேயன்றி மனைவி மீதுள்ள காதலால் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்