மனைவி, தோழியுடன் ஒரே குடியிருப்பில் வசித்த வந்த நபருக்கு நேர்ந்த சோகம்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

சுவிஸின் Hedingen நகராட்சியில் வசித்து வந்த இளம் வயது நபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

குறிப்பிடத்தக்க அந்த நபர், தனது இரண்டாவது மனைவி மற்றும் மனைவியின் நெருங்கிய தோழி ஆகியோருடன் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இந்த நபர், தனது துப்பாக்கியை எடுத்து தனது மனைவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார், இதில் அவரது காலில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மனைவியின் தோழிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்நபர் இறந்துபோனார். மூன்று பேரும் தங்களது குடியிருப்பில் கிடந்த நிலையில், பொலிசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்துபோன நபரிடம் அதிக பணம் இருந்ததாகவும், இதற்கு நடைபெற்ற சண்டையில் முதலில் அந்த நபர் தான் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

ஆனால், இந்நபர் எப்படி இறந்துபோனார் என்பது மர்மமாகவே உள்ளது. மேலும், இவரது நடத்தை சரியில்லாத காரணத்தால் ஏற்பட்ட சண்டையில் இந்த கொலை நடந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

தற்போது, இரு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னரே, அந்நபரின் மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

,

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்