சூடான ஐபோன் பற்றரி: அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் ஐபோனின் பேட்டரி சூடானதால், உண்டான புகையால் ஆப்பிள் ஸ்டோரில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுவிஸின் சூரிச் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோரிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று இந்த ஸ்டோரில் உள்ள ஆப்பிள் ஐபோனின் பேட்டரி சூடானதால் புகைமூட்டம் உருவாகியுள்ளது.

இதனால் கடையில் இருந்த 50 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர், மேலும் கடை ஊழியர் ஒருவர் போனில் இருந்த பற்றரியை அகற்ற முற்பட்டபோது, அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த புகை வெளியேற்றத்தின் காரணமாக ஏழு பேருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது என்றும், ஆனால் அவர்கள் மருத்துவமனைக்குசெல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சூரிச் நகர பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்