சுவிஸ்க்கு 41.5 மில்லியன் பிராங்குகள் வழங்கும் பிரான்ஸ்: ஏன் தெரியுமா?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
230Shares
230Shares
lankasrimarket.com

சமூக நல ஒப்பந்தத்தின் படி சுவிட்சர்லாந்துக்கு 41.5 மில்லியன் பிராங்குகளை நிதியாக பிரான்ஸ் தர ஒப்புக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஜெனிவாவின் அரசு உறுப்பினர் மவுரோ போகியா பிரான்ஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாக சுவிஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் தங்களுக்குள் பண உதவி செய்து கொள்ள வேண்டும் என்பது அடிப்படை விடயமாகும்.

இந்த பணமானது அடுத்தாண்டு கொடுக்கப்படவுள்ள நிலையில், அதன் பெரும்பகுதி சுவிஸின் பொதுநல பயனபாட்டாளர்கள் அதிகம் வசிக்கும் Vaud மற்றும் Geneva மண்டலங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தம் கடந்த 90 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் கடந்தாண்டு கலைக்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனுடன் மக்களுக்கு இலவச உதவி வழங்கும் ஒப்பந்தம் கடந்த 2002-ல் அமுலுக்கு வந்து விட்டதால் இனி இந்த ஒப்பந்தம் செல்லாது என பிரான்ஸ் வாதாடியது.

இதையடுத்து சுவிஸ் வெளியுறவு துறை அமைச்சர் இக்னாசியோ காசிஸ் பாரிஸுக்கு கடந்தாண்டு டிசம்பர் சென்று அந்நாட்டு அதிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதே போல சமூக நல ஒப்பந்ததின் படி சுவிஸ் பிரான்ஸுக்கு வெறும் 3.5 மில்லியன் பிராங்குகள் மட்டுமே ஒதுக்கியது என்ற செய்தி வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்