சுவிசில் டிரம்புக்கு எதிராக போராட்டம்

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிட்சர்லாந்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு எதிராக போராட்டம் நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு உலகப் பொருளாதார அமைப்பு இயங்கி வருகிறது.

இந்த அமைப்பின் வருடாந்திர மாநாடு டாவோஸ் நகரில், ஜனவரி 22ம் திகதியில் இருந்து ஐந்து தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

இதில் உலகெங்கும் இருந்து 40 நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என 3000 பேர் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் வருகை தரவுள்ளார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 700க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் தலைநகரான பேர்னில் கூடி நேற்று போராட்டம் நடத்தினர்.

"Eat the rich", "Fight WEF, Trump, capitalism" போன்ற வசனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இருந்தனர்.

உலகப் பொருளாதார மாநாடு மட்டுமின்றி, அரசியல் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருடாந்திர சந்திப்பை எதிர்த்தும் போராட்டம் நடத்தினர்.

இதுதவிர Trump not welcome - stay out of Davos என தலைப்பிட்ட மனுக்கு ஆதரவாக 12,880 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கிடையே 23ம் திகதி சூரிச் வரவுள்ள டிரம்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்