சுவிட்சர்லாந்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு: உளவுத்துறை எச்சரிக்கை

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சிரியாவில் குர்திஷ் மக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதால், சுவிஸில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக சுவிஸ் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சுவிஸ் உளவுத்துறை கூறுகையில், ‘கடந்த வாரம் சூரிச் நகரில், சுமார் 15,000 குர்திஷ் மக்கள் துருக்கியின் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சுவிஸில், கடந்த ஆண்டுகளில் இந்த கூட்டமே, ஆர்ப்பாட்டம் நடத்திய மிகப்பெரிய கூட்டம் ஆகும்.

எனவே, சுவிஸில் செயல்படும் வகையிலான அமைப்புகளுக்கும், குர்திஷ் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளன.

இதனால், துருக்கிய மற்றும் குர்த்திய அமைப்புகளின் தாக்குதல்கள் சுவிஸில் நடைபெறக்கூடும்.

மேலும், கூட்டம் நிறைந்த மசூதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான ஆபத்துகளும் உள்ளன’ என தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்