வடகொரிய ஏவுகணையின் ஒரு பாகம் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டது: வெளியான தகவல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

2012ஆம் ஆண்டு வடகொரியா ஏவிய ஏவுகணை ஒன்றின் உடைந்த பாகங்கள் மஞ்சள் கடல் பகுதியில் தென் கொரிய கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன.

சுவிட்சர்லாந்து முதற்கொண்டு 13 நாடுகளில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் அந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் வட கொரியாவுடன் முட்டிக்கொள்ளும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்களும் அந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டிருந்தது ஐரோப்பிய யூனியன் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The State Secretariat for Economic Affairs (SECO), ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த direct current converter சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த பாகம் எப்படி வட கொரிய ராக்கெட்டில் பொருத்தப்பட்டது என்பது தெரியவில்லை.

சுவிட்சர்லாந்து ஏராளமான பொருட்களை தயாரித்து இணையத்தில் விற்பனை செய்வதால் எப்படி இந்த பாகம் வட கொரியாவைச் சென்றடைந்தது என்பதை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அந்த பாகத்தைத் தயாரித்த நிறுவனம் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், அதன் வினியோகஸ்தர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதாகவும் SECO தெரிவித்தது.

சுவிஸ் நிறுவனத்தின் பக்கம் எந்த தவறும் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் கிரிமினல் விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படாது என்று SECOவின் செய்தித் தொடர்பாளரான Fabian Maienfisch தெரிவித்தார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்