சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம்: ஐநாவின் மனித உரிமை ஆணையம் கண்டனம்

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிஸில் நடந்த கூட்டம் ஒன்றில், சிரியாவில் நடத்தப்படும் போர்த்தாக்குதல்கள் குறித்து, ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணைய பேரவை தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சிரியாவில் நடந்து வரும் போரினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கவுட்டா நகரில், அரசுப்படைகளின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி, ரஷ்ய விமானப்படை குண்டு வீசி வருகிறது.

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு, சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, தினமும் ஐந்து மணிநேரம் தாக்குதல் நிறுத்தி வைக்கப்படும் என்று ரஷ்யா தெரிவித்தது.

எனினும், வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பல்வேறு நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், சுவிட்ஸர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் மனித உரிமை பிரிவு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர்கள், சிரியாவில் நடைபெற்று வரும் போர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க பங்கேற்றனர்.

அப்போது, மனித உரிமை ஆணைய பேரவை தலைவர் கூறுகையில், ‘சிரியாவில் நடப்பது அப்பட்டமான போர்க்குற்றம். கிளர்ச்சியாளர்களை காரணம் காட்டி, அப்பாவி பொதுமக்களை கொல்வது நிறுத்தப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைய பேரவை, ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்